< Back
சினிமா செய்திகள்
ஏ.ஆர்.ரகுமானின் இசைக்குழுவில் பணியாற்றும் கிதார் கலைஞர் மோகினிடே கணவரை பிரிவதாக அறிவிப்பு
சினிமா செய்திகள்

ஏ.ஆர்.ரகுமானின் இசைக்குழுவில் பணியாற்றும் கிதார் கலைஞர் மோகினிடே கணவரை பிரிவதாக அறிவிப்பு

தினத்தந்தி
|
20 Nov 2024 7:55 PM IST

கிதார் கலைஞர் மோகினிடே தன் கணவர் மார்க்கை பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளார்.

சென்னை,

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு நேற்று அறிவித்திருந்தார். அதனை சில மணி நேரத்திலேயே ஏ.ஆர். ரகுமானும் உறுதி செய்தார். இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், ஏ.ஆர்.ரகுமானின் இசைக்குழுவில் கிதார் கலைஞராக பணியாற்றும் மோகினி டே என்பவர் விவகாரத்து அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் "அன்பான நண்பர்கள், குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்கு, நானும் என் கணவர் மார்க்கும் பிரிந்துவிட்டோம் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இருவரும் பேசி மனமொத்து இந்த முடிவை எடுத்தோம். அதனால் மனமொத்து பிரிந்துவிடுவது தான் சரி என்கிற முடிவுக்கு வந்தோம்.

இருப்பினும் இருவரும் இணைந்தே பணியாற்றுவோம். அது எந்த நேரத்திலும் நிறுத்தப்படாது. நீங்கள் எங்களுக்கு அளித்த ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம். நீங்கள் எதையும் தவறாக கணிக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று அந்த பதிவில் கூறி இருக்கிறார்.

மேலும் செய்திகள்