< Back
சினிமா செய்திகள்
மோகன்லாலின் பரோஸ்...புதிய போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

மோகன்லாலின் 'பரோஸ்'...புதிய போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
23 Nov 2024 6:42 AM IST

பரோஸ் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

பிரபல மலையாள நடிகர் மோகன்லால். இவர் தற்போது ஒரு படத்தை இயக்கியுள்ளார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இப்படத்திற்கு 'பரோஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கிறார்.

குழந்தைகளைக் கவரும் விதமாக உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைக்கிறார். 3டி-யில் உருவாகியுள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது. வாஸ்கோடகாமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களைப் பாதுகாத்த, பாதுகாவலரான பரோஸ் என்பவரின் வாழ்க்கை கதைதான் இந்தப் படம் என்று கூறப்படுகிறது.

இப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேதி மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் வருகிற டிசம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அதன்படி தற்போது புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்