< Back
சினிமா செய்திகள்
Mohanlal - Shobana Reunite After 20 Years: Movie Name Revealed
சினிமா செய்திகள்

20 வருடங்களுக்கு பிறகு இணைந்த மோகன்லால் - ஷோபனா: படத்தின் பெயர் அறிவிப்பு

தினத்தந்தி
|
12 Nov 2024 5:54 PM IST

இப்படத்திற்கு தற்காலிகமாக 'எல்360' என்று பெயரிடப்பட்டிருந்தநிலையில், படக்குழு பெயரை அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால், 'நெரு', 'மலைக்கோட்டை வாலிபன்' படங்களைத்தொடர்ந்து தனது 360-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை, இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார். 'ஆப்ரேஷன் ஜாவா', 'சவுதி வெள்ளக்கா' படங்களை இயக்கியதன் மூலம் இவர் கவனம் பெற்றார்.

ரஞ்சித் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். இப்படத்தில் மோகன்லாலுடன் நடிகை ஷோபனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 1985-ல் முதன்முதலாக மோகன்லால்- ஷோபனா இணைந்து 'அவிடத்தி போலே இவிடேயும்' என்ற படத்தில் நடித்தார்கள்.

கடைசியாக 2004-ல் மாம்பழக்காலம் என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். தற்போது மீண்டும் 20 வருடங்களுக்கு பிறகு இணைந்து நடித்துள்ளனர். சமீபத்தில், படப்பிடிப்பு நிரைவடைந்து.

இப்படத்திற்கு தற்காலிகமாக 'எல்360' என்று பெயரிடப்பட்டிருந்தநிலையில், படக்குழு பெயரை அறிவித்துள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'துடரும்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்