< Back
சினிமா செய்திகள்
Mohanlal, Manju warrior starrer L2 Emburaan: The team has announced the release date
சினிமா செய்திகள்

'எல் 2 எம்புரான்': ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

தினத்தந்தி
|
1 Nov 2024 11:07 AM IST

'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிரித்விராஜ், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்த போஸ்டர் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளதால் இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்