< Back
சினிமா செய்திகள்
Miss You to clash with Pushpa 2 at the box office
சினிமா செய்திகள்

'புஷ்பா 2' படத்துடன் 'மிஸ் யூ' படம் பாக்ஸ் ஆபீஸில் மோதுவது குறித்து பேசிய நடிகர் சித்தார்த்

தினத்தந்தி
|
26 Nov 2024 9:02 PM IST

சித்தார்த் நடித்துள்ள 'மிஸ் யூ' படம் வருகிற 29 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சென்னை,

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'இந்தியன் 2' படத்தையடுத்து நடிகர் சித்தார்த் நடித்துள்ள படம் 'மிஸ் யூ'. என் ராஜசேகர் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் நடித்திருக்கிறார். இவர்களுடன், கருணாகரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

7 மைல்ஸ் பெர் செகண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 29 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் வெளியாகி 5 நாட்கள் பின்பு அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள 'புஷ்பா 2' படம் வெளியாகிறது.

இந்நிலையில், மிஸ் யூ படத்தின் புரமோசன் பணியின்போது, புஷ்பா 2 படத்துடன் மிஸ் யூ படம் பாக்ஸ் ஆபீஸில் மோதுவது குறித்து நடிகர் சித்தார்த் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'அவர்கள்தான் இதற்கு கவலைப்பட வேண்டும், அது என்னுடைய பிரச்சினை இல்லை. ஒரு படம் நன்றாக இருந்தால், அது திரையரங்குகளில் இருக்கும். அதை அங்கிருந்து யாரும் அகற்ற முடியாது' என்றார்.


மேலும் செய்திகள்