< Back
சினிமா செய்திகள்
Mirzapur Web Series To Be Adapted In Movie;
சினிமா செய்திகள்

திரைப்படமாக உருவாகும் பிரபல பாலிவுட் வெப் சீரிஸ்

தினத்தந்தி
|
29 Oct 2024 12:17 PM IST

மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற வெப் சீரிஸ் 'மிர்சாபூர்'.

சென்னை,

கடந்த 2008 ஆம் ஆண்டு கரன் அனுஷ்மான், குர்மீத் சிங் இயக்கத்தில் அமேசான் பிரைம் ஓ.டி.டியில் வெளியான பாலிவுட் வெப் சீரிஸ் 'மிர்சாபூர்' மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில், பங்கஜ் திரிபாதி, அலி பசல், ஸ்வேதா திரிபாதி ஷர்மா, ரசிகா துகல், விஜய் வர்மா, இஷா தல்வார். அஞ்சும் ஷர்மா, ராஜேஷ் தைலாங், ஷீபா சதா, மேக்னா மாலிக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அதனைத்தொடர்ந்து, 2020-ம் ஆண்டு இந்த தொடரின் 2-வது சீசனும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இதன் 3-வது சீசன் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்த சீசனும் வெற்றிபெற்றுள்ளநிலையில், இதனை திரைப்படமாக உருவாக்க படக்குழு முடிவெடுத்துள்ளது.

இது குறித்தான அறிவிப்பை அமேசான் பிரைம் தளம், வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. குர்மீத் சிங் இயக்க உள்ள இப்படம் 2026-ம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ரசிகர்கள உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்