முன்பு உணவு பரிமாறிய பெண்...தற்போது பாலிவுட்டில் கவர்ச்சி நடிகை
|இவர் இந்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடனமாடியும் நடித்தும் இருக்கிறார்.
மும்பை,
சிறு வயதில் குடும்ப கஷ்டம் காரணமாக சமையற்காரரிடம் வேலை செய்து திருமணங்களில் உணவு பறிமாறி தினசரி ஊதியமாக ரூ.50 சம்பாதித்த இந்த பெண், தற்போது பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக உள்ளார். நாம் பேசும் நடிகை வேறுயாரும் இல்லை ராக்கி சாவந்த்.
ராக்கி சாவந்த் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ஆவார். இவர் இந்தி, கன்னடம், மராத்தி, தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடனமாடியும் நடித்தும் இருக்கிறார். தமிழில் இவர் 'என் சகியே, முத்திரை' போன்ற படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார்.
முன்பு ஒரு நேர்காணலில் ராக்கி சாவந்த், சிறு வயதில் கஷ்டத்தின் காரணமாக சமையற்காரரிடம் வேலை செய்தபோது டினா அம்பானியின் திருமணத்தில் உணவு பரிமாறியதை வெளிப்படுத்தினார். பின்னர், இவர் 1997-ம் ஆண்டு வெளியான 'அக்னிசக்ரா' திரைப்படத்தில் அறிமுகமானார்.
மேலும் பாலிவுட் படங்களான ஜோரு கா குலாம், ஜிஸ் தேஷ் மே கங்கா ரெஹ்தா ஹைன் மற்றும் யே ராஸ்தே ஹைன் பியார் கே ஆகியவற்றில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். ராக்கி சாவந்த் திரையுலகில் முன்னணி நடிகையாக முடியவில்லை என்றாலும், கவர்ச்சி நடனமாட அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக ஆனார்.