விஜய் படத்தால் மன அழுத்தம்.. ஆதங்கத்தை கொட்டிய பிரபல நடிகை
|விஜய் ஆண்டனியின் 'கொலை' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி.
சென்னை,
தமிழில் விஜய் ஆண்டனியின் 'கொலை' படம் மூலம் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி. சமீபத்தில் வெளியான ஆர்.ஜே.பாலாஜியின் 'சிங்கப்பூர் சலூன்' மற்றும் விஜய்யின் 'தி கோட்' ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். பின்னர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'லக்கி பாஸ்கர்' படத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.
குறுகிய காலத்திலேயே சினிமாவில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள இவர், தற்போது வெங்கடேஷ் நடித்துள்ள 'சங்கராந்திகி வஸ்துன்னம் 'படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் 14-ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய மீனாட்சி சவுத்ரி, 'தி கோட்' படத்தால் மன அழுத்தம் ஏற்பட்டதாக தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'தி கோட் படத்தில் விஜய்யுடன் நடித்த ஸ்ரீநிதி கதாபாத்திரத்திற்கு என்னை பலரும் கேலியும், கிண்டலும் செய்தனர். இணையத்தில் வந்த டிரோலால் நான் மன அழுத்தத்தில் இருந்தேன். ஆனால், துல்கர் சல்மானுடன் நடித்த் 'லக்கி பாஸ்கர் படத்தை பார்த்துவிட்டு பலரும் என்னை பாராட்டினர். அப்போதுதான் நல்ல கதையம்சம் கொண்ட படத்தை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்' என்றார்.