வெளியானது 'தி கோட்' படத்தின் மட்ட வீடியோ பாடல்
|விஜய் மற்றும் திரிஷா இருவரும் ஆடி இருக்கும் 'மட்ட' பாடலின் முழு வீடியோ வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்). இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த 5-ந் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய், அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. இந்தநிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'தி கோட்' படம் விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இப்படம் 18 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 420 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான மட்ட பாடலின் லிரிக் வீடியோ சுமார் 27 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இந்த நிலையில் படக்குழு விஜய் மற்றும் திரிஷா இருவரும் ஆடி இருக்கும் மட்ட பாடலின் முழு வீடியோவை வெளியிட்டுள்ளது.