< Back
சினிமா செய்திகள்
துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட மாரி செல்வராஜ்
சினிமா செய்திகள்

துருவ் விக்ரம் நடிக்கும் 'பைசன் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட மாரி செல்வராஜ்

தினத்தந்தி
|
23 Sept 2024 6:02 PM IST

துருவ் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு 'பைசன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் மிகுந்த பாராட்டை பெற்றது. இதையடுத்து, தனுஷ் நடித்த 'கர்ணன்', உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்',மற்றும் 'வாழை' உள்ளிட்ட படங்களை மாரி செல்வராஜ் இயக்கினார்.

இதைத் தொடர்ந்து ஆதித்யா வர்மா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு 'பைசன் காளமாடன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தநிலையில், நடிகர் துருவ் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு, 'பைசன்' படத்தின் புதிய போஸ்டரை இயக்குனர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் துருவ் விக்ரமிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார். மேலும், இந்தாண்டு இறுதிக்குள் இப்படம் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்