'மரண மாஸ்' முதல் 'மனசிலாயோ' வரை: ரஜினிகாந்த், அனிருத் கூட்டணி ஹிட்ஸ்
|நடிகர் ரஜினிகாந்த், அனிருத் கூட்டணியில் பல பிளாக்பஸ்டர் பாடல்கள் வந்துள்ளன.
சென்னை,
கோலிவுட்டில் குறிப்பாக சமீபத்திய ஆண்டுகளில் சில விஷயங்களை கூர்ந்து கவனிக்கும்போது இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணி வெற்றிகரமான கூட்டணி என்பது தெளிவாகத் தெரிகிறது.
இவர்களின் கூட்டணியில் பல பிளாக்பஸ்டர் பாடல்கள் வந்துள்ளன. அவ்வாறு இவர்கள் இணைந்து பணிபுரிந்து ஹிட் அடித்த பாடல்களை தற்போது காணலாம்.
வேட்டையன்
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க, 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், 'மனசிலாயோ' மற்றும் 'ஹண்டர் வண்டார்' பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
தர்பார்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், இதில் இடம் பெற்றிருந்த 'சும்மா கிழி' பாடல் பலராலும் பாராட்டப்பட்டது
ஜெயிலர்
நெல்சன் இயக்கத்தில் கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இப்படம் ரூ. 650 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி மிகப்பெரிய ஹிட் அடித்தது. மேலும், அனிருத் இசையமைப்பில் உருவான 'காவாலா' மற்றும் 'ஹுகும்' பாடல்கள் மிகவும் வைரலாகின.
பேட்ட
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்றிருந்த 'மரண மாஸ்' மற்றும் 'உல்லாலா' பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.