< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

'வேட்டையன்' படத்தின் மனசிலாயோ பாடல் வெளியீடு

தினத்தந்தி
|
9 Sept 2024 5:50 PM IST

ரஜினியின் 'வேட்டையன்' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க, இப்படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார்.

அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படம் அக்டோபர் மாதம் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் 'மனசிலாயோ' பாடலின் கிளிம்ஸ் வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டது. இந்த பாடலில் மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் குரலை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

தற்போது இந்த படத்தின் 'மனசிலாயோ' என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த பதிவை லைகா நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்