மம்முட்டி - கவுதம் வாசுதேவ் மேனன் படத்தின் அப்டேட்
|நடிகர் மம்மூட்டி, இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவான படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
கேரள திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி . இதுவரை ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவரது நடிப்பில் தற்போது உருவாக உள்ள திரைபடம் குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் அண்மையில் வெளியான டர்போ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் முதல் மலையாளப் படமான இப்படத்தை தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் மம்முட்டியே தயாரிக்க உள்ளார் . இதில் நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு 'டோமினி அண்ட் த லேடீஸ் பர்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக சிறப்பு போஸ்டர் மூலம் படக்குழு சமீபத்தில் அறிவித்தது. படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்க்கும்போது மம்முட்டி துப்பறிபவராக இருப்பார் என தெரிகிறது. கிரைம் திரில்லராக இருக்கும் என்பதை போஸ்டர் உறுதி செய்கிறது.
இந்த நிலையில், மம்மூட்டி கம்பெனி நிறுவனம் படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட மம்மூட்டியின் புகைப்படத்தைப் பகிர்ந்து விரைவில் டோமினிக் படத்தின் அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது. இம்மாத இறுதிக்குள் இப்படத்தின் டீசர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜித்தின் கே. ஜோஸ் இயக்கும் புதிய படத்தில் மம்முட்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.