< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
விஜய் படத்தில் 'பிரேமலு' நடிகை மமிதா பைஜு?
|6 Aug 2024 9:33 AM IST
மமிதா பைஜுவின் அடுத்த படம் தொடர்பான செய்தி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை,
மலையாளத்தில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூல் குவித்த 'பிரேமலு' படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொத்தாக அள்ளிய இளம் கதாநாயகி மமிதா பைஜுவுக்கு பட வாய்ப்புகள் குவிகின்றன.
தமிழில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'ரெபல்' படத்திலும் நடித்தார். தற்போது விஷ்ணு விஷால், பிரதீப் ரங்கநாதன், அதர்வா படங்களில் நடித்து வருகிறார். தென் இந்திய திரையுலகில் மளமளவென முன்னேறி வருகிறார். இந்நிலையில், மமிதா பைஜுவின் அடுத்த படம் தொடர்பான செய்தி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதன்படி, விஜய்யின் 'தளபதி 69' படத்தில் நடிக்க மமிதா பைஜுவிடம் படக்குழு பேசிவருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது விஜய் 'தி கோட்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.