தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மலையாள மாடல் அழகி
|நடிகை சம்ரிதி தாரா நடித்த புதிய படத்தை இயக்குனர் ஏபிஜி. ஏழுமலை இயக்கியுள்ளார்.
சென்னை,
மலையாள சினிமாவில் அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடித்து வருபவர் சம்ரிதி தாரா. இவர் பல அழகி போட்டிகளில் கலந்து கொண்டு பல பட்டங்களை வென்றவர். இந்த நிலையில், இவர் தற்போது 'மையல்' என்ற தமிழ் படத்தில் முதல் முறையாக அறிமுகமாகிறார்.
இந்த படத்தினை ஏபிஜி. ஏழுமலை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை சம்ரிதி தாரா, 'மைனா' படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த நடிகர் சேதுவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் சமூக பிரச்சினையை எடுத்துரைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் பி.எல். தேனப்பன் மற்றும் சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திருவண்ணாமலைக்கு அருகில் அமைந்துள்ள கல்வராயன் மலையின் அழகிய இடங்களிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முழுப் படமும் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் மொத்த படப்பிடிப்பு பணிகள் சுமார் 37 நாட்களில் நிறைவடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.