மலையாள திரையுலக பாலியல் விவகாரம்: நடிகை ராதிகாவிடம் வாக்குமூலம் பெற வாய்ப்பு?
|கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகளின் ஆபாச காட்சிகளை பகிர்ந்ததாக ராதிகா கூறியிருந்தார்.
சென்னை,
கேரளாவில் நடிகைகள் மீது நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் வெளியாகின. முதலில் நடிகைகள் சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து, மலையாள திரையுலக பாலியல் விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஏற்கனவே புகார் தெரிவித்த நடிகைகளை நேரில் சந்தித்தும் , தொலைபேசியில் அழைத்தும் வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்து வந்தனர்.
அதன் அடிப்படையில் தற்போது நடிகை ராதிகாவும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அதாவது, கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகளின் ஆபாச காட்சிகளை பகிர்ந்ததாக கூறியிருந்தார். இதனை அடிப்படையாக கொண்டு முதலில் இந்த சம்பவம் எங்கு நடந்தது? எப்போது நடந்தது? என்பது பற்றிய விவரங்களை சேகரிக்க விசாரணை குழு முடிவெடுத்துள்ளது.
அதனைத்தொடர்ந்து தேவைப்பட்டால், நடிகை ராதிகாவிடம், நேரில் விசாரணை நடத்தவோ, வாக்குமூலம் பெறவோ திட்டமிடப்படும் என்று எதிர்பார்கப்படுகிறது. ராதிகா பகிர்ந்துள்ள இந்த தகவல் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.