கணக்காளரை கரம் பிடித்த பிரபல மலையாள நடிகை - குருவாயூர் கோவிலில் திருமணம்
|லண்டனில் கணக்காளராக பணிபுரியும் ஸ்ரீஜு என்பவரை நடிகை மீரா நந்தன் கரம் பிடித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
தமிழில் வால்மிகி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மீரா நந்தன். தொடர்ந்து ஆதி ஜோடியாக அய்யனார், சரத்குமாருடன் சண்ட மாருதம் மற்றும் காதலுக்கு மரணமில்லை, நேர்முகம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
மீரா நந்தனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை தேடினர். அப்போது திருமண தகவல் மையம் மூலம் லண்டனில் கணக்காளராக வேலை பார்க்கும் ஸ்ரீஜு என்பவரை தேர்வு செய்தனர். மீரா நந்தனும், ஸ்ரீஜும் துபாயில் சந்தித்து பேசினர். இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்து போனது.
இதையடுத்து மீரா நந்தன், ஸ்ரீஜு திருமண நிச்சயதார்த்தம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 13-ம் தேதி கேரளாவில் உள்ள கொச்சியில் நடந்தது. இந்நிலையில், இவர்களது திருமணம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில்
திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோவில் இன்று காலை நடைபெற்றுள்ளது. இது குறித்தான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.