மலையாள நடிகர் ஷேன் நிகாம் தமிழில் அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு
|மலையாள நடிகர் ஷேன் நிகாம் 'மெட்ராஸ்காரன்' என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார்.
சென்னை,
கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'கிஸ்மத்' படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம். தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான 'இஷ்க்', 'கும்பளங்கி நைட்ஸ்', 'ஆர்டிஎக்ஸ்' உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் ஷேன் நிகாம் தற்போது 'மெட்ராஸ்காரன்' என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார்.
இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் ஜெகதீஷ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர் வசந்தகுமார் படத்தொகுப்பு செய்கிறார்.
இந்த நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனை படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.