'முரா' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
|சுராஜ் வெஞ்சரமூடு நடித்துள்ள முரா படத்தின் ஆக்சன் காட்சிகளின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
சென்னை,
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சுராஜ் வெஞ்சரமூடு. இவர் தற்பொழுது சீயான் விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதுவே இவர் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமாகும். இவர் முஹம்மது முஸ்தபா இயக்கத்தில் வெளியான முரா படத்தில் நடித்துள்ளார். முஸ்தபாவின் 2021 ஆம் ஆண்டு வெளியான 'கப்பேலா' திரைப்படத்திற்குப் பிறகு முஸ்தபாவின் இரண்டாவது படம் 'முரா'.
இப்படத்தில் கனி கஸ்தூரி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். எச்ஆர் பிக்சர்ஸின் கீழ் ரியா ஷிபு தயாரித்த இப்படத்தின் திரைக்கதையை சுரேஷ் பாபு எழுதியுள்ளார். மிதுன் முகுந்தன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் கடந்த 8-ந் தேதி வெளியானது. இந்த படத்தை விஜய் சேதுபதி மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
திருவனந்தபுரத்தை மையமாக வைத்து நட்பு, துரோகம் மற்றும் குற்றங்களை அடிப்படையாகக் கொண்டு ஆக்சன் திரைப்படமாக உருவாகி உள்ளது. இந்த படத்தில் மாலா பார்வதி, கனி குஸ்ருதி, கண்ணன் நாயர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஆக்சன் காட்சிகளின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.