< Back
சினிமா செய்திகள்
பாரதிராஜா நடித்துள்ள நிறம் மாறும் உலகில் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
சினிமா செய்திகள்

பாரதிராஜா நடித்துள்ள 'நிறம் மாறும் உலகில்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

தினத்தந்தி
|
20 Jan 2025 8:42 PM IST

பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிறம் மாறும் உலகில்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் பாரதி ராஜா தற்போது அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நட்டி,யோகி பாபு, ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது.

திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக தற்போது படக்குழுவினர் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்