'மேஜர் முகுந்த், தன்னை இந்தியர் என்று சொல்லிக்கவே ஆசைப்படுவார்' - ராஜ்குமார் பெரியசாமி
|அமரன் படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
சென்னை,
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளியன்று வெளியான படம் 'அமரன்'. மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.
உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படம் உலகலவில் இதுவரை ரூ.140 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த், தன்னை இந்தியர் என்று சொல்லிக்கவே ஆசைப்பட்டதாக கூறினார். இது குறித்து அவர் கூறுகையில்,
'மேஜர் முகுந்த், தன்னை இந்தியர் என்று சொல்லிக்கவே ஆசைப்படுவார், தனது சான்றிதழில் கூட எந்த குறியீடும் இருக்கக்கூடாது என நினைப்பார். எனவே அவருக்கு 'இந்தியன்', 'தமிழன்' என்ற அடையாளத்தை மட்டுமே இந்த படத்தில் கொடுங்கள் என அவரின் குடும்பத்தார் என்னிடம் கேட்டுக்கொண்டனர்' என்றார்.