< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'உங்களை மிகவும் மிஸ் பண்ணுகிறோம் அப்பா' - மகேஷ் பாபுவின் பதிவு வைரல்
|31 May 2024 4:11 PM IST
தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படத்தை மகேஷ் பாபு பகிர்ந்துள்ளார்.
சென்னை,
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு. இவரது தந்தை கிருஷ்ணா. இவர் கடந்த 2022-ம் ஆண்டு உயிரிழந்தார். கிருஷ்ணா 350 படங்களுக்கு மேல் நடித்த ஒரு பழம்பெரும் தெலுங்கு நடிகர் ஆவார். நடிப்பு மட்டுமின்றி, பல படங்களை இயக்கியும் தயாரித்தும் இருக்கிறார். இன்று இவரது பிறந்தநாளாகும்.
இந்நிலையில், நடிகர் மகேஷ் பாபு அதனை நினைவுகூர்ந்து தனது தந்தையின் படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஒரு சிறிய குறிப்பையும் எழுதியுள்ளார்.
அதில், 'பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அப்பா... உங்களை மிகவும் மிஸ் பண்ணுகிறோம், என்னுடைய ஒவ்வொரு நினைவிலும் என்றும் இருப்பீர்கள்', இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகேஷ் பாபு, தற்போது எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார், இதற்கு தற்காலிகமாக எஸ்.எஸ்.எம்.பி29 என்று பெயரிடப்பட்டுள்ளது.