< Back
சினிமா செய்திகள்
லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணையும் மாஸ்டர் மகேந்திரன்?
சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணையும் 'மாஸ்டர்' மகேந்திரன்?

தினத்தந்தி
|
7 July 2024 1:20 PM IST

மகேந்திரன், ரஜினிகாந்தின் 'முத்து', 'படையப்பா' போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

ஐதராபாத்,

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பயணத்தை தொடங்கி பிறகு கதாநாயகனாக வலம் வருபவர் மாஸ்டர் மகேந்திரன். 1994-ல் வெளியான நாட்டாமை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கோயம்புத்தூர் மாப்பிள்ளை, நட்புக்காக போன்ற பல படங்களில் நடித்த பிறகு 'விழா' படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார்.

இவர், சமீபத்தில் வெளியான 'மாஸ்டர்' படத்தில் சிறு வயது விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். தற்போது, ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இவர் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மகேந்திரன், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ஆக்சன் படமாக தயாராகும் 'கூலி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

மகேந்திரன் ரஜினிகாந்தின் 'முத்து', 'படையப்பா' போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்