நடிகர் மாதவன் ஏற்பாடு செய்த தீபாவளி கொண்டாட்டத்தில் அஜித்
|நடிகர் மாதவன் ஏற்பாடு செய்த தீபாவளி கொண்டாட்டத்தில் அஜித் கலந்து கொண்ட வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
துபாய்,
மாதவன் மற்றும் அஜித் குடும்பங்கள் ஏற்கனவே நட்புறவில் உள்ள நிலையில், துபாயில் மாதவன் தனது வீட்டில் தீபாவளி கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில் மாதவனின் குடும்ப நண்பர்கள், உறவினர்கள் வருகை தந்திருந்தனர். நடிகர் மாதவனின், துபாய் வீட்டில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் அஜித் சிறப்பு விருந்திராக பங்கேற்றுள்ளார்.
மாதவனின் மனைவி சரிதா குறித்து வெளியாக வீடியோவில், பூஜை, உணவு பரிமாறுதல் மற்றும் நிகழ்வில் பங்கேற்ற பல்வேறு விருந்தினர்களின் ஒத்துழைப்புடன் விழாக்கள் கோலாகலமாக நடந்துள்ளது. துபாயில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள கார் பந்தயத்திற்கு முன்னதாக தனது ரேசிங் அணியுடன் பங்கேற்க உள்ள அஜித்குமார் மாதவன் வீட்டு விழாவில் பங்கேற்றுள்ளார். தமிழ் சினிமாவின் மிகவும் விரும்பப்படும் நடிகர்கள் இருவர் இடம்பெற்றுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமானார், இதில் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி நாயகியாக நடித்திருந்தார், கடந்த 2000ம் ஆண்டு வெளியான இப்படம், தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காதல் படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த வாரம்தான் ஷாலினி மாதவனுடன் எடுத்த செல்பியை "எந்திரும் புன்னகை" என்ற தலைப்பில் பகிர்ந்து கொண்டார். அலைபாயுதே படத்தில் மாதவனின் அறிமுகப் பாடல் இதுவாகும், மேலும் மணிரத்னம் படத்தின் தொடர்ச்சியுடன் ஷாலினி மீண்டும் நடிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்திய இந்த மனதைக் கவரும் புகைப்படம் தற்போது பேசும்பொருளாக மாறியுள்ளது.