நடிகையை காதலிக்கிறாரா சுரேஷ் கோபியின் மகன்? - வைரல் பதிவு
|மாதவ் கோபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை செலின் ஜோசப்பிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் சுரேஷ் கோபி. இவரது மூத்த மகன் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும், இளைய மகன் மாதவ் கோபியும் மலையாள படம் ஒன்றில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், மாதவ் கோபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ரணம்' நடிகை செலின் ஜோசப்பிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அந்த பதிவில்,
'அவர் ஒரு சிறப்பான நபர். அவரை கொண்டாட விரும்புகிறேன். அவர் என்னுடைய குறைகளை புரிந்து கொண்டு என்னை ஒரு முழு மனிதனாக மாற்றியுள்ளார். அவருடைய புன்னகை என் வாழ்க்கையை ஒளிர செய்கிறது. அவரது குரல் மிகவும் இனிமையானது. அவருடன் இருக்கும்போது எனக்கு ஆற்றல் கிடைக்கிறது.
அவரை சந்தித்த நாளிலிருந்து என் வாழ்க்கையில் ஒளியேற்றப்பட்டு வருகிறது. பிறந்தநாள் வாழ்த்துகள்,' இவ்வாறு தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இருவரும் காதலிப்பதாகவும், மேலும் சிலர் அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது.