< Back
சினிமா செய்திகள்
Maanaadu completes 3 years - Actor Simbu|
சினிமா செய்திகள்

3 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' - நடிகர் சிம்பு நெகிழ்ச்சி

தினத்தந்தி
|
25 Nov 2024 7:58 PM IST

மாநாடு திரைப்படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

சென்னை,

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாநாடு'. இந்த திரைப்படம் தொடர் தோல்வி படங்களால் துவண்டு இருந்த சிம்புவிற்கு திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய சாதனை படைத்தது. மேலும் இந்த படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பலரின் பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் மாநாடு திரைப்படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, நடிகர் சிம்பு நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

'மாநாடு வெளியாகி 3 வருடங்கள் ஆகிறது. இருந்தும், எப்போதும் இல்லாத சிறந்த உணர்வை கொடுக்கிறது. இதற்கு காரணமாக இருந்த படக்குழுவுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்