< Back
சினிமா செய்திகள்
lucky bhaskar review
சினிமா செய்திகள்

'லக்கி பாஸ்கர்' படம் எப்படி இருக்கிறது? - விமர்சனம்

தினத்தந்தி
|
5 Nov 2024 11:00 AM IST

குடும்பத்தை விட்டுக்கொடுக்காத மனைவியாக வரும் மீனாட்சி சவுத்ரி குடும்ப தலைவியாக அழுத்தமான நடிப்பை வழங்கி உள்ளார்.

சென்னை,

துல்கர் சல்மான் 'லக்கி பாஸ்கர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகை மீனாட்சி சவுத்ரி, சுமதி கதாபாத்திரத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியானது. தற்போது இப்படம் எப்படி உள்ளது என்பதை காண்போம்.

வங்கியில் வேலை செய்யும் துல்கர் சல்மான், மனைவி மீனாட்சி சவுத்ரி, மகன், தம்பி, தங்கை என குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். குடும்ப செலவுக்கு அந்த வருமானம் போதாமல் கஷ்டப்படுகிறார். அந்த சமயத்தில் அவருக்கு கிடைக்க இருந்த பதவி உயர்வும் பறிபோகிறது.

இதனால் உடைந்துபோகும் துல்கர் சல்மான், சட்டவிரோதமாகப் பணம் சம்பாதிக்கும் வழிக்குச் செல்கிறார். ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்து துல்கர் சல்மானை சி.பி.ஐ. பிடிக்கிறது. அதன்பின் என்னவெல்லாம் நடந்தது, துல்கர் சல்மான் தப்பித்தாரா என்பது மீதி கதை.

தந்திரமான புத்திசாலி கதாபாத்திரத்தில் சாதுரியமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் துல்கர் சல்மான். குடும்பத்தை விட்டுக்கொடுக்காத மனைவியாக வரும் மீனாட்சி சவுத்திரி குடும்ப தலைவியாக அழுத்தமான நடிப்பை வழங்கி உள்ளார். ராம்கி, சாய்குமார் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். மாஸ்டர் ரித்விக், சச்சின் கடேகர், சுதா, டினு ஆனந்த் நெகிழ்ச்சியான காட்சியில் குறைசொல்லமுடியாத நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

1990-கள் காலகட்டத்தை நிமிஷ் ரவி கண்முன் நிறுத்தி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசை கதையை விறுவிறுப்பாக நகர்த்த உதவி உள்ளது. துல்கர் சல்மானின் வங்கி மோசடிகளை உடன் பணிசெய்பவர்களால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை, ரூ.92-ல் இருந்து ரூ.100 கோடி அளவுக்கு ஒரு வங்கியில் பணம் இருக்குமா என்பது போன்ற லாஜிக் கேள்விகளும் எட்டிப்பார்க்கின்றன.

வங்கி மற்றும் பங்கு மார்க்கெட் மோசடிகளை நேர்த்தியான திரைக்கதையில் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் காட்சிப்படுத்தி அனைத்து தரப்பினருக்கும் பிடித்த பொழுதுபோக்கு படமாக கொடுத்து உள்ளார் இயக்குனர் வெங்கி அட்லூரி.


மேலும் செய்திகள்