< Back
சினிமா செய்திகள்
சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து பட நடிகை
சினிமா செய்திகள்

'சூர்யா 45' படத்தில் இணைந்த 'லப்பர் பந்து' பட நடிகை

தினத்தந்தி
|
30 Nov 2024 3:41 PM IST

ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் 'சூர்யா45' படத்தில் லப்பர் பந்து பட நடிகை சுவாசிகா நடிக்க உள்ளார்.

சென்னை,

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 14-ந் தேதி 'கங்குவா' படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 45' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க உள்ளார். 19 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சூர்யா-திரிஷா இணைந்து நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இதற்கிடையில், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் கோவையில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது லப்பர் பந்து பட நடிகை சுவாசிகா 'சூர்யா 45' படத்தில் நடிக்க உள்ளார் என்பதாகும். இதனை நடிகை சுவாசிகாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். சுவாசிகா இந்த படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்