< Back
சினிமா செய்திகள்
Love Insurance Kompany releases a unique poster to wish Diwali
சினிமா செய்திகள்

வித்தியாசமான போஸ்டர் வெளியிட்டு தீபாவளி வாழ்த்து கூறிய 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படக்குழு

தினத்தந்தி
|
31 Oct 2024 11:21 AM IST

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படக்குழு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது.

சென்னை,

'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே). இந்த படத்தை தமிழ் சினிமாவில் 'போடா போடி' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இவர் கடைசியாக 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ மற்றும் பர்ஸ்ட் சிங்கிளான 'தீமா' பாடலும் வெளியாகி வைரலாகின.

இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும்நிலையில், இப்படத்தின் படக்குழு வித்தியாசமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த படத்தை அடுத்த வருடம் கோடைக்காலத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் செய்திகள்