< Back
சினிமா செய்திகள்
அஸ்வினை மஞ்சள் ஜெர்சியில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் - நடிகர் தனுஷ்
சினிமா செய்திகள்

அஸ்வினை மஞ்சள் ஜெர்சியில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் - நடிகர் தனுஷ்

தினத்தந்தி
|
18 Dec 2024 8:37 PM IST

அஸ்வினை விரைவில் மஞ்சள் ஜெர்சியில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அஸ்வினின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அஸ்வின் ஓய்வு தொடர்பாக நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

"நம்பமுடியாத நினைவுகளை அளித்த அஸ்வினுக்கு நன்றி. இத்தனை வருடங்களாக நீங்கள் செய்த சாதனைகளுக்கு வாழ்த்துகள். இந்திய கிரிக்கெட் நிச்சயமாக ஒரு சாம்பியன் பந்து வீச்சாளரை மிஸ் செய்யும். உங்களை விரைவில் மஞ்சள் நிற ஜெர்சியில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்