< Back
சினிமா செய்திகள்
லோகேஷ் கனகராஜின் கூலி பட அப்டேட்
சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜின் 'கூலி' பட அப்டேட்

தினத்தந்தி
|
9 Feb 2025 7:58 AM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு பணி நேற்று சென்னையில் தொடங்கியுள்ளது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத் மற்றும் பாங்காக் ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மீதமிருக்கும் படப்பிடிப்பை விரைவில் முடிக்க பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். அதற்கான படப்பிடிப்பை நேற்று சென்னையில் தொடங்கியுள்ளனர். தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு வருகிற மார்ச் மாதத்திற்குள் நிறைவடைய உள்ளது.

அதே சமயம் இன்னும் இரண்டு வாரங்களில் நடிகர் ரஜினிகாந்த தனது கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்ய உள்ளார். இதற்கிடையில் இந்த படமானது ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் பரவி வருகின்றன.

மேலும் செய்திகள்