< Back
சினிமா செய்திகள்
கூலி படம் குறித்து லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்
சினிமா செய்திகள்

'கூலி' படம் குறித்து லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்

தினத்தந்தி
|
27 Aug 2024 6:50 PM IST

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தின் அப்டேட் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இயக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சுருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதற்கிடையே, படத்தின் வணிகத்திற்காக பிற மொழி நட்சத்திர நடிகர்களை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் முயன்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் கதாபாத்திரங்களின் அறிமுகங்கள் நாளை மாலை 6 மணியிலிருந்து துவங்கும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்