< Back
சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்
நடிகர் அமீர் கானுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

15 March 2025 7:39 AM IST
அமீர் கானுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து லோகேஷ் கனகராஜ் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கிறார்.
சென்னை,
பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான். இவர் நேற்று தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தநிலையில், தமிழ் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் வாழ்த்து கூறினார்.
லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி படத்தை இயக்கி வருகிறார். ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அமீர்கான் கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.
அமீர் கான் கடைசியாக 'லால் சிங் சட்டா' படத்தில் நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபீசில் தோல்வியடைந்திருக்கும்நிலையில், அடுத்ததாக 'சிதாரே ஜமீன் பர்' படத்தில் நடித்து வருகிறார். நேற்று லோகேஷ் கனகராஜுக்கும் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது .