'லியோ 2' அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்
|விஜய் தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை,
நடிகர் கவின் நடிப்பில் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியான படம் பிளடி பெக்கர். இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் பிலமென்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தை அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவபாலன் முத்துக்குமார் இயக்கி இருக்கிறார்.
இதில் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்சயா ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், பிளடி பெக்கர் திரைப்படத்தை படக்குழுவினருடன் திரையரங்கிற்கு சென்று பார்த்த லோகேஷ் கனகராஜ், படத்தை பாராட்டியதோடு மட்டுமில்லாமல் லியோ 2 குறித்த அப்டேட்டும் கொடுத்துள்ளார்.
பிளடி பெக்கர் திரைப்படத்தை பார்த்த பின்னர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவரிடம் லியோ 2 குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் 'அதை விஜய் அண்ணாதான் சொல்லவேண்டும். அவர் சரி சொன்னால் கண்டிப்பாக லியோ 2 வரும்' என்றார்.