< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
சூர்யாவின் 49-வது பிறந்தநாள்: ரீ-ரிலீசாகும் படங்கள்
|26 Jun 2024 9:27 AM IST
சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவர் நடித்த படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள படம் 'கங்குவா'. அதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 44-வது படத்தில் நடித்து வருகிறா. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நடந்து வருகிறது.
இந்நிலையில், சூர்யா தனது 49-வது பிறந்தநாளை அடுத்த மாதம் 23-ம் தேதி கொண்டாட உள்ளார். அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவர் நடித்து மிகவும் பிரபலமான சில படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, காக்க காக்க, கஜினி, வாரணம் ஆயிரம், அயன் மற்றும் சிங்கம் ஆகிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
முன்னதாக நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த 6 படங்கள் ரீ-ரிலீசானது என்பது குறிப்பிடத்தக்கது.