< Back
சினிமா செய்திகள்
1 வருடத்தை நிறைவு செய்த லியோ - படக்குழு பகிர்ந்த வீடியோ வைரல்
சினிமா செய்திகள்

1 வருடத்தை நிறைவு செய்த லியோ - படக்குழு பகிர்ந்த வீடியோ வைரல்

தினத்தந்தி
|
19 Oct 2024 12:24 PM IST

விஜய் கதாபாத்திரத்தின் வீடியோவை லியோ படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19-ந்தேதி வெளியானது 'லியோ' திரைப்படம். இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மடோனா செபாஸ்டியன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான 'லியோ' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

உலக அளவில் சுமார் ரூ.620 கோடிக்கும் மேல் வசூலித்த 'லியோ' திரைப்படம் 2023-ல் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் ஒன்றாக உள்ளது. இதன் 2-ம் பாகமும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 1 வருடம் நிறைவடைந்துள்ளநிலையில், விஜய் கதாபாத்திரத்தின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. அதேபோல், லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் செய்திகள்