பிரபல பாடகி சாரதா சின்கா காலமானார்
|சாரதா சின்காவுக்கு 2018-ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
மும்பை,
பிரபல போஜ்புரி பாடகி சாரதா சின்கா (72). இவர் போஜ்புரி மட்டுமில்லாமல் மைதிலி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல பாடல்களை பாடி இருக்கிறார். தன் நாட்டுப்புறப் பாடல்களால் மக்களை பெரிதும் கவர்ந்தவர். இவருக்கு நம் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது கடந்த 2018-ம் ஆண்டு வழங்கப்பட்டது.
இவ்வாறு இருக்கையில், கடந்த 2017ம் ஆண்டு இவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அதற்கான சிகிச்சைகளை அவர் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சாரதா சின்கா காலமானார். இதனையடுத்து, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.