< Back
சினிமா செய்திகள்
Legend Saravanan teamed up with the director of Garuden
சினிமா செய்திகள்

'கருடன்' பட இயக்குனருடன் இணைந்த லெஜெண்ட் சரவணன்

தினத்தந்தி
|
24 Jun 2024 9:27 PM IST

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

சென்னை,

தொழிலதிபராக இருக்கும் லெஜெண்ட் சரவணன் கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழில் வெளியான தி லெஜண்ட் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகினார்.

இப்படத்தை ஜே டி ஜெர்ரி இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் லெஜெண்ட் சரவணன், சமீபத்தில் சூரி நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த கருடன் திரைப்படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இயக்குனர் துரை செந்தில்குமார் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் லெஜண்ட் சரவணன் முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார். தாடி, மீசை மற்றும் கையில் துப்பாக்கியுடன் காணப்படுகிறார். லெஜண்ட் சரவணனுக்கு இத்திரைப்படம் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்