'தனியாக எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்றும் கற்றுக்கொள்ளுங்கள்' - பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர்
|கரண் ஜோகர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார்.
மும்பை,
பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனர் கரண் ஜோகர். இவர் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர், என பன்முகத் திறன் கொண்டவர். பாலிவுட் திரையுலகில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல பிரபலங்கள் இவர் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர்கள்.
தற்போது இவர், அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கும் 'சந்த் மேரா தில்' படத்தை தயாரிக்கிறார். விவேக் சோனி இயக்கும் இப்படத்தில் லக்சயா லால்வானி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரண் ஜோகர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'உங்களை சுற்றி சிறந்த நபர்களை வைத்துக்கொள்ளுங்கள், அதே சமயம் தனியாக எப்படி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்ளுங்கள்' என்று பதிவிட்டுள்ளார்.