< Back
சினிமா செய்திகள்
கிளாசிக்கல் இசையை கற்றுக்கொள்ளுங்கள் அனிருத்! - ஏ.ஆர். ரகுமான் அறிவுரை
சினிமா செய்திகள்

கிளாசிக்கல் இசையை கற்றுக்கொள்ளுங்கள் அனிருத்! - ஏ.ஆர். ரகுமான் அறிவுரை

தினத்தந்தி
|
8 Jan 2025 4:43 PM IST

'காதலிக்க நேரமில்லை' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் அனிருத்திற்கு அறிவுரை வழங்கினார்.

சென்னை,

ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'. இந்த படத்தை "வணக்கம் சென்னை" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி இப்படத்தை இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் அனிருத், இயக்குனர் மிஷ்கின் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பாளர் அனிருத்திற்கு அறிவுரை ஒன்றை வழங்கினார்.

அதாவது, இப்போது அனிருத் நன்றாக இசையமைக்கிறார். பெரிய படங்களுக்கு ஹிட் கொடுக்கிறார். உங்களுடைய வெற்றிக்கு என்னுடைய பாராட்டுகள். ஆனால் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். இன்னும் அதிகமாக கிளாசிக்கல் இசையை கற்றுக்கொண்டு, கிளாசிக்கல் இசையில் பாடல்கள் இசையமைக்க வேண்டும். அப்போது தான் சினிமாவில் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்க முடியும்" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்