கசிந்த ஆபாச காட்சி - மவுனம் கலைத்த மலையாள நடிகை
|ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான படம் "ஆல் வி இமேஜின் அஸ் லைட்".
சென்னை,
பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான படம் "ஆல் வி இமேஜின் அஸ் லைட்". இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கடம், ஹிருது ஹாரூன், அஸீஸ் நெடுமங்காட் மற்றும் டிண்டுமால் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிட்ட முதல் இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை படைத்தது மட்டுமில்லாமல், கிராண்ட் பிரிக்ஸ் என்ற பிரிவில் விருதும் வென்றது.
கடந்த 22ஆம் தேதி மலையாளம், இந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில், இப்படத்தில் நடிகை திவ்ய பிரபா நடித்த ஆபாச காட்சி இணையத்தில் கசிந்தது. இந்நிலையில், அதற்கு நடிகை திவ்ய பிரபா மவுனம் கலைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'ஒரு நடிகையாக, எனக்கு பிடித்த கதைகளில் நடிக்கிறேன். புகழுக்காக நான் ஆபாச காட்சியில் நடித்ததாக சிலர் விமர்சனம் செய்கிறார்கள். நான் பல விருதுகளை வெற்றிருக்கிறேன். அதோடு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்களிலும் நடித்திருக்கிறேன். அதனால் ஆபாசமாக நடித்துதான் புகழ் பெற வேண்டும் என்ற நிலைமை எனக்கு இல்லை. கசிந்த வீடியோயை பகிர்ந்தவர்கள் மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர்தான்' என்றார்.