< Back
சினிமா செய்திகள்
Leading Bollywood actor who wants to work with Rashmika Mandanna
சினிமா செய்திகள்

ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் முன்னணி பாலிவுட் நடிகர்

தினத்தந்தி
|
17 Dec 2024 9:02 PM IST

ராஷ்மிகா மந்தனாவுடன் பணிபுரிய பல முன்னணி நடிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

சென்னை,

ராஷ்மிகா மந்தனா தற்போது நாட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். புஷ்பா 2 படத்தின் வெற்றி அவரது புகழை வேறொரு நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது என்றே சொல்லலாம். அது அவரை இந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் கதாநாயகிகளில் ஒருவராகவும் மாற்றியுள்ளது.

இதனையடுத்து, அவருடன் பணிபுரிய பல முன்னணி நடிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அந்தவகையில், பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனும் இதையே தெரிவித்தார். நிகழ்ச்சி ஒன்றில், அடுத்து எந்த நடிகையுடன் பணிபுரிய விரும்புகிறீர்கள் என்று கார்த்திக் ஆர்யனிடம் கேட்டபோது, ராஷ்மிகா மந்தனாவுடன் பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார்.

கார்த்திக் ஆர்யன் கடைசியாக 'பூல் புலையா 3' படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்தது. ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட்டில் சாவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்