பாராட்டிய முன்னணி பாலிவுட் நடிகர் - ஹனுமான் பிரபலம் தேஜா சஜ்ஜா நெகிழ்ச்சி
|கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'சாம்பி ரெட்டி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தேஜா சஜ்ஜா.
சென்னை,
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் தேஜா சஜ்ஜா. கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'சாம்பி ரெட்டி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், பிரசாந்த வர்மா இயக்கத்தில் இந்தாண்டு ஜனவரி மாதம் வெளியான 'ஹனுமான் படத்தின் மூலம் பிரபலமானார்.
அமிர்த்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார்,சமுத்திரக்கனி, வினய் ராய் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்த இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, தேஜா சஜ்ஜாவுக்கு பலரது பாராட்டுகள் கிடைத்தன. அதன்படி, தேஜா சஜ்ஜாவை பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பாராட்டி இருந்தார்.
இந்நிலையில், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேஜா சஜ்ஜா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது,
'ரன்வீர் சிங்கிடம் இருந்து எனக்கு கிடைத்த பாராட்டு மிகவும் சிறப்பாக இருந்தது. அது அவருடைய இதயத்தில் இருந்து வந்தது. அது வெறும் பாராட்டு மட்டும் கிடையாது. ஊக்கமும் கூட. என் பயணத்தை இன்னும் சிறப்பானதாக்கியதற்கு நன்றி ரன்வீர் சிங்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேஜா சஜ்ஜா அடுத்ததாக மிராய் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கார்த்திக் கட்டாமானேனி இயக்குகிறார்.