'கில்' நடிகருடன் இணைந்த அனன்யா பாண்டே
|அனன்யா பாண்டே நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மும்பை,
ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான அனன்யா பாண்டே, சமீபத்தில் தனது முதல் வெப் தொடரான 'கால் மீ பே'வில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, 'சி.டி.ஆர்.எல்' என்ற படத்தில் நடித்தார். சாப்ரான் மற்றும் அந்தோலன் பிலிம்ஸ் இணைந்து தயாரித்த இந்த திரில்லர் படத்தில் அனன்யா பாண்டே கண்டன்ட் கிரியேட்டராக நடித்திருந்தார்.
இந்நிலையில், அனன்யா பாண்டேவின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, கரண் ஜோஹர் தயாரிப்பில் உருவாக இருக்கும் 'சந்த் மேரா தில்' படத்தில், லக்சயா லால்வானி மற்றும் அனன்யா பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
விவேக் சோனி இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் தொடர்பான மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. லக்சயா லால்வானி கடைசியாக ஆக்சன்-திரில்லர் படமான 'கில்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.