< Back
ஓ.டி.டி.
ஓ.டி.டி.யில் வெளியானது  குரங்கு பெடல்
ஓ.டி.டி.

ஓ.டி.டி.யில் வெளியானது 'குரங்கு பெடல்'

தினத்தந்தி
|
14 Jun 2024 8:39 PM IST

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான குரங்கு பெடல் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். அவரது தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றி பெற்றன. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது 'குரங்கு பெடல்' என்ற படத்தை தயாரித்துள்ளார். கமல் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 'குரங்கு பெடல்' திரைப்படம் மே 3-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.


இப்படத்தில் காளி வெங்கட் அந்த சிறுவனின் அப்பாவாக நடிக்கிறார். யூடியூப் பிரபலங்களாக அறியப்பட்டு வெள்ளித்திரையில் நடித்து வரும் பிரசன்னா பாலச்சந்திரன் , ஜென்சன் திவாகர் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். டிரெய்லர் டைட்டில் கார்டில் இடம்பெற்றுள்ள "விளையாட்டு வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு நல்லது" என்கிற வசனம் கவனத்தை ஈர்க்கிறது.

இப்படத்தை கமலகண்ணன் இயக்க, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சந்தோஷ் வேல்முருகன், விஆர் ராகவன், ஞானசேகர், ரத்திஷ், சாய் கனேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.சைக்கிள் ஓட்டுவதற்கு கற்றுக்கொள்ளும் 5 சிறுவர்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குரங்கு பெடல் திரைப்படம் தற்போது ஆஹா ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்