
வெப் தொடரில் நடிக்க கீர்த்தி சனோன் போட்ட நிபந்தனை

கீர்த்தி சனோன் தற்போது தனுஷுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை,
இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சனோன், ராமாயணம் கதையை மையமாக வைத்து தயாரான 'ஆதிபுருஷ்' படத்தில் சீதை வேடத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். 'மிமி' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.
தற்போது கீர்த்தி சனோன், தனுஷுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஜெய்ப்பூரில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை கீர்த்தி சனோன், வெப் தொடரில் நடிக்க நிபந்தனைகளை விதித்தார். அவர் பேசுகையில்,
'வெப் தொடரில் நடிக்க வேண்டுமெனில் ஒரு நடிகையாக எனக்கு அந்தக் கதை ஆர்வத்தை தூண்ட வேண்டும். முற்றிலும் புதியதாக அவுட் ஆப் தி பாக்ஸாக இருக்க வேண்டும். என்னெனில் வெப் தொட்ரின் நீளம் படத்தைவிட அதிகம். அதனால், அந்தளவுக்கு என் ஆர்வத்தை தூண்டும் கதையாக அது இருக்க வேண்டும்' என்றார்.