< Back
சினிமா செய்திகள்
‘Krishna and His Leela’ to release with ‘its complicated’ title
சினிமா செய்திகள்

5 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தலைப்புடன் திரைக்கு வரும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் படம்

தினத்தந்தி
|
4 Feb 2025 8:29 AM IST

ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு உருவான படம் ’கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’

சென்னை,

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழில், விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, மாறா, இறுகப்பற்று உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் பாபி கொல்லி இயக்கத்தில் டாகு மகாராஜ் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 12-ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இவரது நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு உருவான படம் 'கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா'. இப்படம் கொரோனா காரணமாக ஓ.டி.டியில் வெளியானது.

இந்நிலையில், 5 வருடங்களுக்கு பிறகு இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளனர். அதன்படி, சித்து ஜொன்னலகத்தா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படம் 'இட்ஸ் காம்ப்ளிகேட்டடு' என்ற புதிய தலைப்புடன் வருகிற 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்