'கொட்டுக்காளி': ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
|சூரி நடித்த 'கொட்டுக்காளி' படம் ஓ.டி.டியில் வெளியாக உள்ளது
சென்னை,
`கூழாங்கல்' இயக்குனர் பி.எஸ்.வினோத் இயக்கத்தில் சூரி நடித்த திரைப்படம் 'கொட்டுக்காளி'. சிவகார்த்திகேயன் தயாரித்த இத்திரைப்படத்தில் நடிகை அன்னா பென் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் இதுவாகும். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இல்லாதது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
இந்த எதிர்பார்ப்பை தொடர்ந்து, கடந்த மாதம் 23-ம் தேதி இப்படம் வெளியானது. சினிமா நட்சத்திரங்கள் உள்பட பலர் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், இப்படம் ஓ.டி.டியில் வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, சிம்ப்ளி சவுத் ஓ.டி.டி தளத்தில் வரும் 27-ம் தேதி கொட்டுக்காளி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளுக்கு சென்று இப்படத்தை பார்க்க தவறியவர்கள் வரும் 27-ம் தேதி முதல் ஓ.டி.டியில் காணலாம். கொட்டுக்காளி, பெர்லின், ரோட்டர்டேம் ஆகிய சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.