8 ஆண்டுகளை நிறைவு செய்த 'கொடி' திரைப்படம்
|கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'கொடி' படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'ராயன்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்த இவர் 'இட்லி கடை' என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில், இவரது நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் 'கொடி'. இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். மேலும் திரிஷா, அனுபமா பரமேஸ்வரன், சரண்யா பொன்வண்ணன், காளி வெங்கட் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை 'எதிர் நீச்சல்' மற்றும் 'காக்கி சட்டை' ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.
இது தமிழ் அரசியல் அதிரடி திரைப்படம் ஆகும். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் சுமார் ரூ.50 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், இப்படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.