< Back
சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்
ஆண்ட்ரியா குரலில் வெளியான புதிய பாடல் - வைரல்

22 Feb 2025 6:13 AM IST
நடிகையாக மட்டும் இன்றி ஒரு பாடகியாகவும், ஜொலித்து கொண்டிருப்பவர் ஆண்ட்ரியா.
சென்னை,
பிரபல நடிகை ஆண்ட்ரியா. இவர் தமிழ், தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னணி பாடல்களும் பாடி இருக்கிறார். இவ்வாறு நடிகையாக மட்டும் இன்றி ஒரு பாடகியாகவும், ஜொலித்து கொண்டிருக்கிறார் ஆண்ட்ரியா.
இவர் தற்போது இசையமைப்பாளர் இமான் இசையில் லெவன் என்ற படத்திற்கு புதிய பாடல் ஒன்றை பாடி இருக்கிறார். அதன்படி, 'இக்கட ரா' என்ற இந்த பாடலை ஆண்ட்ரியா பாடி இருக்கிறார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.